• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் சார்பில் குருநாகலில் பிராந்திய அலுவலகமொன்றை தாபித்தல்
- விசேட மத அலுவல்கள் உட்பட பிராந்திய ரீதியில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் இரண்டு கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தாபிக்கப்பட்டுள்ளன. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் சார்ந்த விசேட மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளதோடு, பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் நேரடி தலையீட்டின் கீழ் நிருவாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் 54 வழிபாட்டுத் தலங்களும் 2,364 பொது விகாரைகளும் இந்த மாகாணங்களில் அமைந்துள்ளன. இந்த வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விகாரைகளுக்கு ஏற்புடையதான பணிகளையும் தேவையான சேவைகளையும் மிக இலகுவாக வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகமொன்றை குருநாகலில் தாபிக்கும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.