• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ புத்த வருடம் 2562 அரசாங்க வெசாக் விழாவுக்கு மின்சாரம் வழங்குதல் - 2018
- இம்முறை அரசாங்க வெசாக் விழாவானது குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் நடாத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. பிரதான விழா நடாத்தப்படும் விகாரை உட்பட அதற்கண்மித்த பிரதேசத்துக்கு மின்சார ஔியூட்டுவதற்காக மேலும் தேவைப்படும் நிதியங்களை வழங்கும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.