• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (திருத்த) சட்டமூலம்
- 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட பின்வரும் திருத்தங்களை உள்ளடக்கி 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி சட்டத்தை திருத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மதுசாரம் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளுக்கு மேலதிகமாக மதுசாரத்திற்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை விதிப்பதற்கும்.

* பின்வரும் சேவைகள் மற்றும் பொருட்கள் மீதான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை நீக்குதல்.

(அ) கமத்தொழில் நோக்கங்களுக்காக உயர் தொழினுட்பத்தை பயன்படுத்தும் நோக்கில் பசுமை வீடுகள், Poly tunnels மற்றும் பசுமை வீடுகளை நிருமாணிப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள்.

(ஆ) தேங்காய் எண்ணெய் மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திகள்.

(இ) வெட்டி மெருகூட்டி மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் மாணிக்ககற்கள்.

(ஈ) படகு ஓட்டுதல், கயாக்ஸ், காத்தாடி உதவியுடன் நீர் சருக்கல், சுழியோடல் போன்ற நீர் விளையாட்டுகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மூலம் இயங்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள்.

(உ) தொங்கிச் செல்லும் கிளைடர், பலூன், செலுத்தக்கூடிய விமானங்கள், பரசூட், பரா கிளைடர் போன்ற ஆகாய விளையாட்டுக்களுக்குத் தேவையான இயக்கத் தேவையற்ற விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள்.

(ஊ) இலங்கை வைப்பு காப்புறுதி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகள்.