• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இடைநிலை ஏற்பாடுகளை செய்தல் மற்றும் அமுல்படுத்தல் சார்ந்த நடைமுறை பிரச்சனைகளைத் தவிர்த்தல் என்பன பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துதல்
- 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டமானது 2018 ஏப்பிரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும். இதன்போது நடைமுறையிலிருந்த உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்த காலங் கடக்காத நட்டோத்தரவாதம், மூலதன கொடுப்பனவு, வரிச் சலுகை போன்ற ஏற்பாடுகளை வரி செலுத்துபவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான இடைநிலை ஏற்பாடுகள் ஒழுங்கு விதிகளாக வௌியிடப்படுதல் வேண்டும். அதேபோன்று புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு இதிலுள்ள சில ஏற்பாடுகளை திருத்த வேண்டியுமுள்ளது. இதற்கமைவாக இந்த நோக்கம் கருதி 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.