• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மூளை மரணித்தவர்களின் உறுப்புகளை உறுப்பு மாற்றம் செய்யும் வழிமுறையொன்றை இலங்கையில் அறிமுகப்படுத்தல்
- மூளை மரணித்தவர்களின் உறுப்புகளை உறுப்பு மாற்றம் செய்தல், பலகாலமாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் அறுவைச் சிகிச்சையொன்றாகும். மூளை மரணித்ததன் காரணமாக மரணித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசம் வழங்கும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒருவரின் உறுப்புக்களை இவ்வாறு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தலாம். முக்கியமாக சிறுநீரகம், இதயம், ஈரல், சுவாசப்பை, கணையம் உணவுத்தொகுதியின் பகுதி அதேபோன்று கண், தோல், வால்வுகள், இருதய வால்வுகள், தசைநார் மற்றும் எலும்புகள் இவ்வாறு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்பு மாற்றம் செய்யக் கூடியசாத்தியம் நலவுகின்றது.

உறுப்புகளை தானம் செய்வதற்கு மரணத்திற்கு முன்னர் விருப்பினைத் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறாத காரணத்தினால் ஆண்டொன்றில் 750-1000 க்கு இடைப்பட்ட அளவில் உறுப்புகள் பயன்படுத்த முடியாமல் புதைக்கப்படுகின்றமையினால், மரணத்தின் பின்னர் உறுப்புகளை தானம் செய்வதற்கு விருப்பினை தெரிவிப்பதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பினை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவுஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் ஆகிய நாடுகள் அவர்களுடைய தேசிய தரவு முறைமைகளை பயன்படுத்தி இந்த பணியினை மேற்கொள்வதோடு, இணையம், தொலைபேசி, குறுஞ்செய்தி போன்றவற்றின் மூலம் உறுப்புக்களைத் தானம் செய்யும் தரவு முறைமையில் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் பலவற்றை ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஏற்பாடு வழங்கியுள்ளன.

முக்கியமாக மோட்டார் வாகனங்களினால் ஏற்படும் திடீர் விபத்துக்கள் மூளை மரணித்த இத்தகைய மரணங்களுக்கு பிரதான காரணமாவதோடு, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 2,500 க்கு மேற்பட்டோர் திடீர் வாகன விபத்துக்களினால் மரணிக்கின்றார்களென கணக்கிடப்பட்டுள்ளது. இதற்மைவாக, மரணத்தின் பின்னர் உறுப்புகளை உறுப்பு மாற்றம் செய்யும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறையொன்றைத் தயாரிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.