• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயாகல சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்தை தாபிப்பதற்காக காணித் துண்டொன்றை உடைமையாக்கிக் கொள்ளல்
- களுத்துறை, தேசிய சுகாதார நிறுவன அதிகார பிரதேசத்தினுள் அமைந்துள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகங்கள் என்பவற்றின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளும் போதும் பயாகல பிரதேசத்தில் குழந்தை மற்றும் தாய் சுகாதாரம் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தும் போதும் நீரிழிவு நோய், இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்கள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் அதேபோன்று டெங்கு நோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் சார்பில் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையிலும் பயாகல, வடுகொட பிரதேசத்துக்கு சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகமொன்றைத் தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இந்த நோக்கத்துக்காக 2004 ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்டுள்ள வடுகொட ஆரம்ப பாடசாலை அமைந்திருந்த காணி மிகப் பொருத்தமானதென தெரியவந்துள்ளது.

இதற்கமைவாக, பயாகல சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்தைத் தாபிப்பதற்காக குறித்த காணித் துண்டை அவருடைய அமைச்சுக்கு உடமையாக்கிக் கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.