• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருதானையில் அமைந்துள்ள வரலாற்றுடன் தொடர்புடைய கொழும்பு முனைய புகையிரத நிலையத்தில் "இலங்கை தேசிய புகையிரத நூதனசாலையை" நிறுவுதல்
- பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் புகையிரத சேவை தொடர்பில் ஆர்வமுள்ளவர்களை கவரும் சருவதேச மட்டத்திலான தரத்தினைக் கொண்ட புகையிரத நூதனசாவையொன்றை இலங்கையில் நிறுவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் போதுமான வளங்கள் மற்றும் வழிமுறைகள் இல்லாமையினால் மருதானை, கடுகன்னாவை பிரதேசங்களில் தற்போது தாபிக்கப்பட்டுள்ள புகையிரத நூதனசாலைகள் உரிய முறையில் செயற்படவில்லை. ஆதலால் புதிய கருத்திட்த்தின் கீழ் இலங்கை தேசிய புகையிரத நூதனசாலையை மருதானையில் அமைந்துள்ள வரலாற்றுடன் தொடர்புடைய கொழும்பு முனைய புகையிரத நிலையத்தையும் அதற்கண்மையில் உள்ள கட்டடங்களையும் புணரமைத்து புகையிரத நூதனசாலையொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வரலாற்று பெறுமதிமிக்க புகையிரதத்துடன் தொடர்புபட்ட சிறிய மற்றும் பாரிய அரும்பொருட்கள் நூற்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இங்கு காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற தரத்தில் உள்ளதென இனங்காணப்பட்டுள்ளதோடு, புதிய நூதனசாலைக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுப்பதன் மூலம் புகையிரத திணைக்களத்திற்கு கணிசமான வருமானத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும். இதற்கமைவாக 'இலங்கை தேசிய புகையிரத நூதனசாலையை' நிறுவும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.