• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கணக்கியல் தொழினுட்பவியலாளர் சங்கம்
- இலங்கை கணக்கியல் தொழினுட்பவியலாளர் சங்கமானது 1987 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. இது கம்பனிகள் சட்டத்தின் கீழ் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இந்த சங்கமானது தற்போது இலங்கையில் பிரதான கணக்கியல் மற்றும் பயிற்சி நிறுவனமொன்றாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிகளை மேலும் விருத்தி செய்து அதிகரித்து சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி துறைகளுக்குத் தேவையான திறன்மிக்க கணக்கியல் தொழில்னுட்பவியலாளர்களை உருவாக்கும் பொருட்டு பாராளுமன்ற சட்டமொன்றினால் கூட்டிணைப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.