• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி மாவட்டத்தில் குழப்பங்களின் காரணமாக சேதமடைந்த வியாபார சொத்துக்கள் சார்பில் சலுகை வட்டி வீதத்தில் கடன்களை வழங்குதல்
- 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதலாம் வாரத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் காரணமாக கண்டி நிருவாக மாவட்டத்தில் சேதமடைந்த வியாபார சொத்துக்களை மீள் கட்டுமாணம் செய்வதற்கு நிவாரணம் வழங்குவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உரிய நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கண்டி மாவட்டத்தில் அத்தகைய சேதமடைந்த வியாபார சொத்துக்களை மீள் கட்டுமாணம் செய்வதற்கு 'அத்வெல கடன்திட்டத்தின்' கீழ் 2% சலுகை வட்டி வீதத்தில் கடன்களை வழங்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.