• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு இரசாயன உரம் வழங்குதல்
- கமத்தொழில் அமைச்சின் கீழ் இலங்கை உரக்கம்பனி (Lak Pohora) மற்றும் Colombo Commercial Fertilizers Ltd., நிறுவனம் ஆகியவற்றினால், 2018 சிறுபோக நெற்செய்கைக்கான விநியோகத்திற்குத் தேவைப்படும் இரசாயன உரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கம் கருதி சருவதேச வழங்குநர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

ஆதலால், M/s. Ameropa Asia (Pvt) Ltd., நிறுவத்திடமிருந்து ஒரு மெற்றிக் தொன்னுக்கு 307.18 ஐக்கிய அமெரிக்க டொலர் படி 24,000 மெற்றிக் தொன் Granular யூரியாவையும், M/s. Agri Commodities & Finance FZE, நிறுவத்திடமிருந்து ஒரு மெற்றிக் தொன்னுக்கு 333.5 ஐக்கிய அமெரிக்க டொலர் படி 18,000 மெற்றிக் தொன் Triple Super பொஸ்பேற்றையும் M/s Agricultural Resources and Investment (Pte) Ltd., நிறுவனத்திடமிருந்து ஒரு மெற்றிக் தொன்னுக்கு 315.85 ஐக்கிய அமெரிக்க டொலர் படி 18,000 மெற்றிக் தொன் பொற்றாசியம் குளோரைட்டையும் (Muriate of Potash), கொள்வனவு செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.