• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பணத்தூய்மையாக்கலை இல்லாதொழிப்பதற்கும் பயங்கரவாதத்திற்கு நிதியீட்டம் செய்வதை தடுப்பதற்குமான ஏற்பாடுகளை கூட்டிணைத்து 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
- பணத்தூய்மையாக்கலை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீட்டம் செய்வதைத் தடுத்தல் தொடர்பான திறமுறை குறைபாடுகளுடன் கூடிய நாடொன்றாக இலங்கையை தரப்படுத்துவதற்கான நடவடிக்கையினை 'நிதி நடவடிக்கை செயலணி' எடுத்துள்ளது. அதற்கிணங்க ஐரோப்பிய ஒன்றியமானது 2018 ஆண்டு பெப்ரவரி மாதம் இது குறித்து இலங்கையினை கறைநிரற்பட்டியற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் நிதி முறைமை மீது ஏற்படக்கூடிய தீவிரமான எதிர்மறை விளைவுகளை கருத்திற் கொண்டு, பணத்தூய்மையாக்கலை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீட்டம் செய்வதைத் தடுத்தலுக்கான மேலதிக சட்ட ஏற்பாடுகளை துரிதமாக செய்வதன் அவசியம் இனங்காணப்பட்டுள்ளது.

கூட்டிணைக்கப்படவுள்ள முக்கியமான ஏற்பாடுகளில் ஒன்று, தமது சொந்த கம்பனியின் 25% ஆன பங்கு உரித்தினை அல்லது கூடுதலான உரிமைத்துவத்தை சொந்தமாக கொண்டுள்ள ஆட்கள், மற்றும் பொது வரையறுக்கப்பட்ட கம்பனி ஒன்று நீங்கலாக ஏனைய சகல கம்பனிகள் பற்றிய அல்லது அத்தகைய கம்பனியொன்றின் தொழிற்பாடுகள் மீது பயனுறுதி வாய்ந்த கட்டுப்பாட்டினைப் பிரயோகிக்கும் பயனாளிகள் பற்றிய தகவல்களை வழங்கும் பதிவேடொன்றினை பேணும் அவசியப்பாடாக இருக்கும். மேலும், அதேபோன்று கம்பனி பதிவாளருக்கும் உரிய ஏனைய அதிகாரிகளுக்கும் அத்தகைய தகவல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியுள்ளன. அதற்கிணங்க, 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திற்கு அவசியமான திருத்தங்களைச் செய்யும் பொருட்டும் இந்நோக்கம் கருதி திருத்தச் சட்டத்தினை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டும் பதில் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ஏ.டி.சம்பிக பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.