• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்துக்கும் பாகிஸ்தான் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான சருவதேச நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல்
- இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான துறைகளில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் குறிக்கோளுடன் இலங்கை கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்துக்கும் பாகிஸ்தான் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான சருவதேச நிலையத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பாகிஸ்தானுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பிரேரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.