• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு கழிவு சேகரிக்கும் வாகனங்களை வழங்குவதற்கு தேவையான நிதியினை ஏற்பாடு செய்து கொள்ளல்
- தேவையான இயந்திர சாதனங்களுடன் பொருத்தமான தொழினுட்பத்தை கொண்டு சிறந்த கழிவு அப்புறப்படுத்தும் வழிமுறைகள் உள்ளூராட்சி அதிகாரசபைகளிடம் இல்லாமையினால் நகர பிரதேசங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவமானது சவால்மிக்க பணியொன்றாக மாறியுள்ளது. ஆதலால், 84 உள்ளூராட்சி அதிகாரசபைகளின் கழிவு சேகரிக்கும் மற்றும் கொண்டு செல்லும் ஆற்றலை விருத்தி செய்யும் நோக்கில் இந்த உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு 190 கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக உறப்படும் செலவினை ஈடுசெய்வதற்காக 14 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை விஞ்சாத கடன் தொகையொன்றை கொரிய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக உரிய உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.