• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழினுட்ப வாழ்க்கை தொழிற்கல்வி, பயிற்சி பிரிவு சார்பில் முகாமைத்துவ தகவல் முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்
- திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சின் கீழ் தொழிற்பயிற்சி மற்றும் தொழில் கல்வியினை வழங்கும் 07 நிறுவனங்கள் இயங்குவதோடு, இந்த நிறுவனங்களின் விடய பரப்பெல்லையின் தரத்தினை உறுதி செய்யும் பணியானது மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் தனியார் துறை பயிற்சி நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பினை பேணுவதையும் காலத்தின் தேவைக்கேற்ப பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை கொண்டு நடாத்துவதையும் நோக்காக கொண்டு இந்த நிறுவனங்களுக்கான நவீன முகாமைத்துவ தகவல் முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.