• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் உள்விழி லென்சுகளை கொள்வனவு செய்தல்
- கண் வெண்படலத்தை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது உள்விழி சார்பில் பயன்படுத்தப்படும் 18,600 Hydrophobic வளையக்கூடிய உள்விழி லென்சுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 322.84 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Vision 2000 (Pvt) Ltd. நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.