• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முல்லைத்தீவு நீர் வழங்கல் திட்டம்
- முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குரிய 09 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தழுவும் விதத்தில் முல்லைத்தீவு நகரம் உட்பட அதற்கண்மித்த பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 7,430 பொதுமக்களுக்கு (சுமார் 1,500 குடும்பங்கள்) பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நோக்காக கொண்டு முல்லைத்தீவு நீர் வழங்கல் திட்டமானது திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நீர் வழங்கல் திட்டத்தின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 894.74 மில்லியன் ரூபாவை கொண்ட தொகைக்கு M/s, Ceylex Engineering (Pvt) Ltd. கம்பனிக்கும் இந்தியாவின் Pratibha Industries Ltd. கம்பனிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.