• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டிற்கான மாற்று நிதியளிப்பு மூலங்கள்
- 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டவாறு, 2018 ஆம் ஆண்டு சார்பில் அரசாங்கத்தின் ஆகக்கூடிய கடன்படல் எல்லை 1,895 பில்லியன் ரூபாவாகும். இந்த ஆண்டின் முதலாம் காலாண்டிற்குள் வௌிநாட்டுக் கடன் சேவை மற்றும் மீள் கொடுப்பனவுகளுக்காக கிட்டத்தட்ட 732 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள உலகலாவிய நிலைமைகள் மற்றும் எதிர்க்காலத்தில் தோன்றும் பிரச்சனைகள் என்னும் சூழமைவில், குறைந்த செலவில் நிதியங்களை பெற்றுக் கொள்ளும் போது, நிலவும் நிலையான வட்டி விகிதங்களின் கீழ், துரிதமாக நிதியங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் ஒப்பீட்டு ரீதியில் உயர்வான செலவுடன், 2018 ஆம் ஆண்டில் முதிர்வடையவுள்ள இலங்கை அபிவிருத்தி முறிகளுக்கு கொடுப்பனவு செய்தலும் அவற்றை விடுவித்தலும் பயனுடையதாகவிருக்கும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இலங்கை வங்கியிடமிருந்தும் மக்கள் வங்கியிடமிருந்தும் அவற்றின் அந்நிய செலாவணி வங்கி அலகுகளுக்கு அல்லது கரைகடந்த வங்கி அலகுகளுக்கு ஊடாக ஆகக்கூடியது 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் வரை இந்நோக்கத்திற்கான நிதியங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பதில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் இரான் விக்கிரமரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.