• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கு விஜயம் செய்யும் புலம்பெயர்ந்து வருபவர்களுக்கான சுகாதார மதிப்பீட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
- 2013 ஆம் ஆண்டில் தேசிய புலம்பெயர் சுகாதார கொள்கை இலங்கையினால் பிரகனப்படுத்தப்பட்டதுடன், அதற்கிணங்க புலம்பெயர்ந்தவர்களின் வருகை காரணமாக நாட்டிற்குள் உள்வரக்கூடிய நோய்களினால் பொதுச் சுகாதாரம் மீது ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை தடுக்கும் பொருட்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. இலங்கையானது வருடாந்தம் கிட்டத்தட்ட 40,000 நீண்டகாலம் தங்கும் அல்லது வதிவிட வீசா விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதுடன் அவற்றில் கிட்டத்தட்ட 60% ஆனவை இலங்கையில் பொதுச்சுகாதாரத்துடன் ஒப்பிடுகையில் உயர் ஆபத்து மட்டத்துடன்கூடிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வரும் பணியாளர் களிடமிருந்து கிடைக்கப் பெற்றதாக இனங்காணப்பட்டுள்ளது. தற்போது, இந்த வருகை தரம் புலம்பெயர்ந்தவர்களின் சுகாதார மட்ட நிலைமை பற்றி மதிப்பிடுவதற்கான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லாதிருப்பதுடன் அவர்களின் சுகாதார செலவினத்தை நிவர்த்தி செய்வதற்கு நாட்டில் அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் சுகாதார காப்புறுதி காப்பீடொன்றை பெற்றுக் கொள்வதற்கு எதுவித ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்களும் அவர்கள் சார்பில் அமுலில் இல்லை.

ஆதலால், இது குறித்து சில துரிதமான நடவடிக்கைகளை எடுத்தல் அவசியமாக மாறியுள்ளது. அதற்கிணங்க, வதிவிட வீசா விண்ணப்பங்களுக்காக சுகாதார மதிப்பீட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை இந்நாட்டில் தாபித்து நடைமுறைப்படுத்துவதற்கென இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் புலம்பெயர்தலுக்கான சருவதேச அமைப்பிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.