• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையில் குழந்தை மற்றும் மகப்பேற்றியல் உசாவுகை நிலையத்தை தாபிக்கும் கருத்திட்டம்
- டி சொய்ஸா மகப்பேற்று வைத்தியசாலையினால் வழங்கப்படும் குழந்தை சிகிச்சை சேவைகளின் தரம் சார்ந்த அம்சத்தை மேம்படுத்துவதற்காக குழந்தை மற்றும் மகப்பேற்றியல் உசாவுகை நிலையத்தை தாபிப்பதற்கும் இந்த நோக்கம் கருதி நிதியங்களை பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கம் கருதி பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து நிதியங்களை பெற்றுக் கொள்வதற்கு இணக்கப் பேச்சுக்கள் நடாத்தப்பட்டுள்ளதுடன் கூறப்பட்ட நிதியங்களை பெற்றுக் கொள்ளவதில் காணப்படும் தடைகள் மற்றும் தாமதங்களை கருத்திற் கொண்டு மாற்று கடன் மூலங்களை கருத்திற் கொள்வதற்கு தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, Standard Chartered வங்கியிடமிருந்து 17.99 மில்லியன் யூரோ மற்றும் சம்பத் வங்கியிடமிருந்து 8.45 மில்லியன் யூரோ கொண்ட கடனொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டும் உரிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.