• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
South Asian Institute of Technology and Medicine (SAITM) நிறுவனத்தின் மருத்துவ மாணவர்களின் கற்கை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்தல்
- South Asian Institute of Technology and Medicine (SAITM) நிறுவனத்திற்கு மருத்துவ மாணவர்களை உள்வாங்குதல், மருத்துவ பட்டம் வழங்குதல் சம்பந்தமாக எழுந்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் இந்த நிறுவனத்தில் மருத்துவ கல்வியில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு சேர்ப்பதற்கு பொருத்தமான வழிமுறையொன்றைச் செய்யும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினையை ஆராய்ந்து உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், இந்தக் குழுவினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* SAITM நிறுவனத்தில் தற்போது கல்வி கற்கும் மருத்துவ மாணவர்களை மாத்திரம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு உள்வாங்குவதற்கும் இங்கு கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டத்தை வழங்குவதற்கும்.

* இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நடாத்திச் செல்வதற்குத் தேவையான மூலதன மற்றும் மீண்டுவரும் செலவுகள் உட்பட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலை சேவைகளை நடாத்திச் செல்வதற்குத் தேவையான மீண்டுவரும் செலவுகள் எனபன அரசாங்கத்தினால் வழங்கப்படுவதற்கும்.