• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி அதிகாரசபைகளின் கழிவு சேகரித்தலை மற்றும் அகற்றலை முறைப்படுத்துவதற்காக கழிவுகளை கொண்டு செல்லும் 100 (Compactors) வாகனங்களை கொள்வனவு செய்தல்
- இலங்கையில் கழிவு அகற்றலை வினைத்திறமையுடனும் முறையாகவும் செய்வதற்கு உள்ளூராட்சி அதிகாரசபைகளிடம் உள்ள வாகனங்களுக்கு மேலதிகமாக சுமார் 341 கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்கள் தேவையென கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் 190 கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்கள் கொரிய கடன் உதவியின் கீழ் பெற்றுக் கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துரிதமாக மேலும் 100 கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்களை உள்நாட்டு நிதியங்களின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக கேள்வியும் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 06 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட கழிவுகளை கொண்டு செல்லும் 100 (Compactors) வாகனங்களை வழங்கும் ஒப்பந்தத்தை 622.13 மில்லியன் ரூபாவை கொண்ட தொகைக்கு சீனாவின் ZXY Hong Kong Company Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.