• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வவுணதீவு சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணித்தல்
- வாழைச்சேனை பிரதேசத்தில் நிருமாணிக்கப்படவுள்ள 10 மெகாவொட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமானது வவுணதீவு நெய்யரி துணை நிலையத்துடன் இணைக்கப்படுகின்றமையினால், இது "வவுணதீவு சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்” என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, 17 நிறுவனங்கள் இதற்கான கேள்விகளை சமர்ப்பித்துள்ளன.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வவுணதீவு சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணித்தல், உடைமையாக்கல் மற்றும் தொழிற்பாடு சார்ந்த ஒப்பந்தத்தை கிலோவோட் மணித்தியாலம் ஒன்றிற்கு 11.86 ரூபா என்னும் ஆகக்குறைந்த விலையை முன்வைத்துள்ள M/s Ex-pack Corrugated Cartons (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.