• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான 100 மெகாவொட் மேலதிக மின்சாரத்தினைக் கொள்வனவு செய்தல்
- தற்போது போதுமான மழை வீழ்ச்சி கிடைக்காமையினால் எதிர்வரும் 06 மாதக் காலப்பகுதிக்குள் நீர்மட்டம் குறைவடையுமென எதிர்ப்பாக்கப்டுவதோடு, இது தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு தடையாக இருக்குமென கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், 100 மெகாவொட் மேலதிக மின்சாரத்தை குறுகிய கால மின்சார கொள்வனவு உடன்படிகையொன்றின் ஊடாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு கேள்வி கோருவதற்க்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்காக சருவதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கிலோவோட் மணித்தியாலம் ஒன்றிற்கு 28.063 ரூபா வீதம் 56 மெகாவோட் மின்சாரம் M/s Aggreko International Projects Limited நிறுவனத்திடமிருந்தும் கிலோவோட் மணித்தியாலம் ஒன்றிற்கு 28.367 ரூபா வீதம் 44 மெகாவோட் மின்சாரம் M/s Heyleys Aventura (Pvt) Limited & SES Smart Energy Solutions Fzco நிறுவனத்திடமிருந்தும் 06 மாதக் காலப்பகுதிக்கு கொள்வனவு செய்யும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.