• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செலவு சிக்கன தொழினுட்பத்தை பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்களின் நிருமாணிப்பு பணிகளை மேற்கொள்தல்
- இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையமானது கட்டட நிருமாணத்தின் செலவு சிக்கன தொழினுட்பம் தொடர்பான ஆராய்ச்சி செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் அத்தகைய ஆராய்ச்சியின் பெற்பேற்றினை பொதுமக்களுக்கு இடையில் பரப்புவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கின்றது. தற்போது பாடசாலைக் கட்டடங்கள், வைத்தியசாலைகளுக்கான ஆய்வுகூடங்கள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் களஞ்சியங்கள், படையிணருக்கான வதிவிடக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு வகையான வீடுகள் ஆகியன இந்த செலவு சிக்கன தொழினுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் பல பாகங்களிலும் நிருமாணிக்கப்பட்டுள்ளன. இந்த முறையானது திட்டமிடல் கட்டத்திலிருந்து பின்பற்றப்படின் மொத்த நிருமாண வெலவிலிருந்து குறைந்தது 20%-25% வரையான நிதிச் சேமிப்பையேனும் கொண்டிருக்கக் கூடியதாகவுள்ளதுடன், மரங்கள், மணல் மற்றும் கருங்கல் என்பவற்றின் பாவனையை குறைக்கும் சாத்திய்பாடும் உண்டு. கட்டட நிருமாணத்திற்காக இத்தொழினுட்பத்தின் பாவனை நிருமாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்குத் தேவையான கட்டடங்களின் நிருமாணிப்புக்காக செலவு சிக்கன முறையின் பயன்பாட்டிற்கான மேற்போந்த மற்றும் உருவாக்கப்படும் ஏற்பாட்டினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பெறுகைச் செய்முறையிலிருந்து விலகி, ஆகக்கூடியது 50 மில்லியன் ரூபாவுக்கு உட்பட்டு, இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு அத்தகைய கட்டடங்களின் மதியுரைச் சேவைகள் வடிவமைப்பு நிருமாணத்தை நேரடியாக கையளிக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.