• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு உகந்த காணிகளை பெற்றுக் கொள்ளல்
- திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் போது இந்தக் கழிவுகளை சுற்றாடல் ரீதியான நட்புறவுமிக்க முறைகளை பின்பற்றி அகற்றுவதற்கு உகந்த காணிகளை பெற்றுக் கொள்ளவதில் உள்ளூராட்சி அதிகாரசபைகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன. கழிவினை அகற்றுவதற்காக சில உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் சட்டபூர்வ உரிமையைக் கையளிக்காமை காரணமாக இந்த காணிகளை சுகாதாரமான நிலநிரப்பல்களாக அபிவிருத்தி செய்யும் போது தடைகள் எழுந்துள்ளன.

ஆதலால், இந்த விடயம் தொடர்பில் உரிய சகல அக்கறைதாரர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் இணங்கி கொள்ளப்பட்டவாறு, கழிவுகளை அகற்றுவதற்காக உரிய உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு ஏற்கனவே குறித்தொதுக்கப்பட்டுள்ள காணிகளை முறைசார்ந்த விதத்தில் உடமையாக்கும் பொருட்டும் சுகாதாரமான நிலநிரப்பல்களாக காணிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் கழிவகற்றலுக்கு உகந்ததாக கண்டறியப்பட்டுள்ள, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கும் சொந்தமான காணித்துண்டுகளையும் காணி சுவீகரித்தல் சட்டத்தின் கீழ் நீண்டகால குத்தகை அடிப்படையில் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் வசமுள்ள காணித் துண்டுகளையும் சுவீகரிக்கும் பொருட்டும் அவற்றை உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு ஒதுக்கும் பொருட்டும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினாலும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.