• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தைத் திருத்துதல்
- குடும்ப வன்முறைகளை இல்லாதொழிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தை கடந்த 12 வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துகையில் அவதானிக்கப்பட்ட பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த சட்டத்தை திருத்தும் தேவையானது எழுந்துள்ளது. இது சம்பந்தமாக பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட உரிய சகல தரப்பினர்களையும் கொண்ட குழுவானது பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், இந்த சட்டத்தை திருத்துவதற்கு சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகும் பெரியோர் அல்லது குழந்தைகள் சார்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய ஆள் வகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், முறைப்பாடுகளை மேற்கொள்ளும் வழிமுறையை இலகுபடுத்துதல், குற்றஞ்சாட்டுபவரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, கட்டாய ஆலோசனைகளை வழங்கும் தேவையை நீக்குதல், பின்னூட்டல் செய்யும் தற்போதைய வழிமுறையை திருத்துதல், தற்காலிக பாதுகாப்பு கட்டளையை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தல் போன்ற சில திருத்தங்கள் இதற்கமைவாக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களை உள்ளடக்கி 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தை திருத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.