• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு முறைமைகளை பொருத்துவதற்கும் வடக்கு புகையிரத பாதையின் புனரமைப்பினை துரிதப்படுத்துவதற்குமாக கருத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றைத் தாபித்தல்
- இலங்கையில் புகையிரத பாதை வலையமைப்பின் நீளம் 1,450 கிலோமீற்றர்கள் ஆவதோடு, இது 1,337 புகையிரதக் கடவைகளைக் கொண்டுள்ளது. ஏற்கனவே இவற்றுள் 520 புகையிரதக் கடவைகள் பாதுகாப்பானவையாகும். 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் மேலும் 400 புகையிரத கடவைகள் சார்பில் புகையிரத பாதுகாப்பு முறைகளைப் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் எஞ்சியுள்ள புகையிரதக் கடவைகள் அனைத்தையும் தழுவும் விதத்தில் புகையிரத கடவைகளை நிருமாணிக்கும் கருத்திட்டமொன்று ஹங்கேரிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை புகையிரத பயணக்காலத்தை அண்ணளவாக 40 நிமிடங்களிலாக குறையும் விதத்தில் மணித்தியாலத்திற்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் வடக்கு புகையிரத வீதியில் புகையிரதம் செல்வதற்கு இயலுமாகும் வகையில் மாஹோ சந்தியிலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதைப் பகுதியை புனரமைப்பதற்கும் பொல்கஹவெலயிலிருந்து குருநாகல் வரை இரட்டைப் பாதையினை நிருமாணிப்பதற்கும் சைகை முறைமைகளை பொருத்துவதற்கும் தேவையான பணிகள் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு கருத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றைத் தாபிப்பதற்கும் ஹங்கேரிய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் நிதியுதவியின் கீழ் புகையிரத கடவை பாதுகாப்பு முறைமைகளை பொருத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.