• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகும்புர பல்பணி நிலையத்தின் நிருமாணிப்புக்கு நிதி பெற்றுக் கொள்ளல்
- தற்போது மாகும்புர பல்பணி போக்குவரத்து நிலையத்தினை நிருமாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகையிரதம், தூர பயண சேவைகள் மறறும் பிராந்திய பஸ் சேவைகள் போன்ற போக்குவரத்து முறைகளை ஒன்றிணைத்து நிருமாணிக்கப்படும் இந்த போக்குவரத்து நிலையத்தின் ஊடாக வினைத்திறன் மிக்க, குறைந்த வருமானமுடைய பொது போக்குவரத்து வசதிகளை செய்வது இதன் நோக்கமாகும்.

இந்த பல்பணி போக்குவரத்து நிலையத்தின் போக்குவரத்து முகாமைத்துவம், கையாள்கை மற்றும் பராமரிப்பு உட்பட பயணிகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல் என்பன பொருட்டு செயற்பாட்டு வழிமுறையொன்றைத் தயாரிப்பதற்காக 306.79 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சுற்றுவட்ட வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிகளுக்கு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையிடமிருந்து (JICA) பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையிலிருந்து எஞ்சியுள்ள நிதியினை பயன்படுத்தி மாகும்புர பல்பணி நிலையத்தின் உத்தேச நிருமாணிப்பினை மேற்கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.