• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொகைமதிப்புக் கூறுகளை பட்டியலிடல்
- சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகைமதிப்பினை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதையும் தழுவும் விதத்தில் தொகைமதிப்பு கூறுகளை அதாவது வீடுகள், கூட்டு வசிப்பிடங்கள் மற்றும் வசிக்க முடியாத இடங்கள் என்பவற்றை பட்டியலிடுதல் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த திணைக்களத்தினால் நடாத்தப்படும் தொகைமதிப்பு யாவற்றுக்குமான மாதிரி கணக்கெடுப்பு கட்டமைப்பொன்றாக இந்த பட்டியலானது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இறுதியாக சனத்தொகை மற்றும் வீடமைப்பு தொகைமதிப்பு நடாத்தப்பட்ட 2012 ஆம் ஆண்டிலிருந்து இது வரையிலான காலப்பகுதியினுள் நிகழ்ந்த அனர்த்தங்கள், புதிய குடியேற்றங்கள் போன்ற காரணங்களினால் இந்த கணக்கெடுப்பு கட்டமைப்பானது கணிசமான அளவு மாற்றமடைந்துள்ளது. சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பினை செம்மையாக செய்வதற்கும் அதேபோன்று அனர்த்த முகாமைத்துவம், நிலைபேறுடைய அபிவிருத்தி நோக்கங்களை அடைதல் போன்ற விடயங்களின் போது இந்த தரவுகள் பயன்படுத்தப்படுகின்றமையினால் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருப்பது அத்தியாவசியமானதாகும்.

ஆதலால், மாவட்ட மற்றும் பிரதேச நிருவாக பொறிமுறையின் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொண்டு முழு நாட்டினையும் தழுவும் விதத்தில் தொகைமதிப்புக் கூறுகளை பட்டியலிடலை 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்வதற்கும் இதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இந்த செயற்பாட்டினை மேற்கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.