• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கணக்காய்வு சட்டமூலம்
- தேசிய கணக்காய்வு சட்டமூலம் 2018 02 20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட சந்தர்ப்பத்திலே இது சம்பந்தமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அவதானிப்புரைகளை பரிசீலனை செய்து உத்தேச சட்டமூலத்தை மேலும் திருத்த வேண்டுமாயின் அதற்கான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிற்கு தொடர்புபடுத்தப்பட்டது.

இதற்கமைவாக இந்த அமைச்சரவை உப குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, இந்த சிபாரிசுகளில் பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்களை சேர்ப்பதற்கு உட்பட்டு, தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.