• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபையின் விநியோக வலயம் 2 சார்பில் தேவைப்படும் பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகளை கொள்வனவு செய்தல்
- இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு பணிகளுக்காகவும் புதிதாக மின்சார விநியோகத்திற்காகவும் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகள் அந்தந்த விநியோக வலயத்திற்கு அமைவாக வெவ்வேறாக மேற்கொள்ளப்படும். இதற்கமைவாக விநியோக வலயம் 2 சார்பில் தேவைப்படும் பண்டெல் செய்யப்பட்ட ஏரியல் மின்கடத்திகளின் (ABC) 3X70+54.6+16ச.மி.மீ.-1500கி.மீ விநியோகித்தலுக்கும் பகிர்ந்தளித்தலுக்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 872.96 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Sierra Cables PLC நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.