• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொல்பிட்டிய - அம்பாந்தோட்டை 220kV பரிமாற்ற வழியினை நிருமாணித்தல்
- பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறனை விருத்தி செய்யும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பொல்பிட்டியவிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலான 150 கிலோமீற்றர் நீளமான 220kV பரிமாற்ற வழியினை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 5,794.32 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. China National Cable Engineering Corporation நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.