• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு அலுவலகத்துக்காக அலுவலக இட வசதிகளை பெற்றுக் கொள்ளல்
- சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு அமைந்துள்ள கட்டடத்தின் இடவசதி போதுமானதாக இல்லாததன் காரணத்தினால் இந்த அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஔடத ஒழுங்குறுத்துகை அதிகாரசபையின் ஒரு பகுதி, நீண்டகால சிறுநீரக நோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம், அமைச்சின் புலனாய்வு, பெறுகை, உள்ளக கணக்காய்வு, சுதேச மருத்துவம் ஆகிய பிரிவுகள் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட கட்டடமொன்றில் தாபிக்கப்பட்டுள்ளது. உரிய வாடகை உடன்படிக்கை காலப்பகுதி முடிவடைய உள்ளதோடு, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கான புதிய அலுவலக கட்டடமொன்றை நிருமாணிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்படும்வரை தொடர்ந்தும் வாடகை அடிப்படையில் அலுவலக இடவசதிகளைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

இதற்கமைவாக அமைச்சின் பெறுகைக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மாதாந்த வாடகை 9.07 மில்லியன் ரூபா வீதம் இரண்டு வருடகாலத்திற்கு கொழும்பு 10, ஶ்ரீ சங்கராஜ மாவத்தை, 26 ஆம் இலக்க மனையிடத்தில் உள்ள 55,000 சதுர அடி இடவசதியுடன் கூடிய Medi House (Pvt.) Ltd. நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.