• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நோய் எதிர்ப்புசக்தி குறைபாடுடைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்ப தற்காக தேவைப்படும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தேவைப்படும் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin 5 - 6 கிராம் புட்டிகள் 33,000 கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 3.06 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு இந்தியாவின் M/s. Reliance Life Science (Pvt.) Ltd., நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.