• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை தூண்கள் மீது செல்லும் நெடுச்சாலை (Elevated Highway) நிருமாணிப்பு கருத்திட்டத்தின் இராஜகிரிய விலிருந்து அத்துருகிரிய வரையிலான பகுதியை நடைமுறைப்படுத்து வதற்கான சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்தல்
- பத்தரமுல்லை, மாலபே, அத்துருகிரிய ஆகிய பிரதேசங்களுக்கும் சுற்றுவட்ட நெடுஞ்சாலைக்கும் இணைப்பினை ஏற்படுத்தி புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை நான்கு பாதை வரிசைகளைக் கொண்ட தூண்கள் மீது நிருமாணிக்கப்படும் நெடுஞ்சாலையொன்றை (Elevated Highway) நிருமாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இந்த கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் இராஜகிரியவிலிருந்து அத்துருகிரிய வரையிலான பகுதியை நிருமாணிப்பதற்கான சாத்தியத் தகவாய்வினை செய்யும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 98.73 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Resource Development Consultans (Pvt) மற்றும் M/s SMEC International Pty ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு முன்னாள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரிப்புக்கு தற்போது இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட உடன்பாட்டினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.