• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலிஸ் பரிசோதகர் தர அலுவலர்களின் தங்குமிட வசதிகள், உணவகம் மற்றும் வாகனத் தரிப்பிடத்தை கொம்பனி வீதி பிரதேசத்தில் நிருமாணித்தல்
- விசேட கடமைகளுக்காக நாட்டின் பல்வேறுப்பட்ட பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு வருகைத்தரும் அத்துடன் அழைக்கப்படும் பொலிஸ் பரிசோதகர் தர அலுவலர்களுக்கு தங்குமிட வசதிகள், உணவகம் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகள் போதுமானதாக இல்லாமை பிரச்சனையாக காணப்படுகின்றது. ஆதலால் இதற்கு மாற்றுவழியாக கொழும்பு கொம்பனி வீதி பிரதேசத்தில் ஆறு மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றைக் குறித்த இந்த வசதிகளுடன் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, 468.27 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிபீட்டு செலவில் இந்த கட்டடத்தின் நிருமாணிப்பு கருத்திட்டத்தை 2018 - 2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு முன்னாள் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.