• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலநாள் கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படும் நீண்ட வரிசை மீன்பிடி தொழில் முறைக்குத் தேவையான இரை மீன்களாக கணவாய் மற்றும் வேக்கையா இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குதல்
- பலநாள் கடற்றொழிலாளர்களினால் டூனா மீன் வளங்களை அறுவடை செய்வதற்காக பயன்படுத்தப்படும் நீண்ட வரிசை மீன்பிடி தொழில் முறையின் போது இரை மீன்களாக கணவாய் மற்றும் வேக்கையா, சூடை மற்றும் பியாமஸ்சன் போன்ற மீன் வகைகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக வருடாந்தம் சுமார் 7,000 மெற்றிக் தொன் மீன் தேவைப்பட்டாலும் அவற்றில் உள்நாட்டில் பெற்றுக் கொள்ள முடியுமாவது 3,000 மெற்றிக் தொன்கள் மாத்திரமாகும். ஆதலால், இரை மீன்களாக கணவாய் மற்றும் வேக்கையா போன்ற மீன் வகைகளை இறக்குமதி செய்து கடற்றொழில் சங்கங்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படுவதோடு, மனித நுகர்வுக்கு பயன்படுத்தக்கூடிய மீன் இனங்களாவதால் இத்தகைய மீன்களின் இறக்குமதியின் போது பொதுவாக இரை இறக்குமதிக்காக வழங்கப்படும் இறக்குமதி வரிச்சலுகை வழங்கப்படுவதில்லை.

இரைக்காக இறக்குமதி செய்யப்படும் மீன்களின் விலை அதிகமென்பதனால் நாட்டில் டூனா மீன் தொழிலுக்கு இது பிரதிகூலமான விதத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. ஆதலால், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் சிபாரிசின் மீது கடற்றொழில் சங்கங்களுக்கிடையில் பகிர்ந்தளிப்பதற்காக மாத்திரம் இறக்குமதி செய்யப்படும் கணவாய் மற்றும் வேக்கையா போன்ற இரைக்காக பயன்படுத்தப்படும் மீன் வகைகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை வழங்குவதற்கும் இதன்கீழ் இறக்குமதி செய்யப்படும் மீன் இரையினை உள்நாட்டு நுகர்வுக்காக பயன்படுத்தாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.