• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017/2018 பெரும்போகத்திற்கான அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- அரசாங்கத்தினால் கடந்த காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெல் கொள்வனவு நிகழ்ச்சி திட்டத்தை மீளாய்வு செய்தும் மாவட்ட செயலாளர்கள் அடங்கலாக உரிய ஏனைய உத்தியோகத்தர்களுடன் இதுப்பற்றி அண்மையில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டும் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை இந்த பெரும்போகத்திலும் மிக பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நெல் கொள்வனவு செய்யும் உத்தரவாத விலையினை உறுதிச்செய்யும் பொருட்டு அரசாங்கத்தின் தலையீடு தேவைப்படும் மாவட்டங்களில் நாடு நெல் கிலோ ஒன்றை 38/- ரூபா வீதமும் சம்பா / கீரி சம்பா நெல் கிலோ ஒன்றை 41/- ரூபா வீதமும் நெல் சந்தைப்படுத்தல் சபையினதும் உரிய மாவட்ட செயலாளர்களினதும் ஒத்தாசையுடன் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.