• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்காசிய வலயத்தின் பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன் எச்சரிக்கை முறைமையின் (RIMES) உபபிராந்திய மையத்தை இலங்கையில் தாபித்தல்
- இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி முன் எச்சரிக்கைக்கு உரிய விஞ்ஞான ரீதியிலான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்குமாக உறுப்பு நாடுகளின் திறனை கட்டியெழுப்புவது சம்பந்தமாக செயலாற்றும் சர்வதேச நிறுவனமான தெற்காசிய வலயத்தின் பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன் எச்சரிக்கை முறைமையின் (RIMES) உபபிராந்திய மையத்தை இலங்கையில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தொழினுட்ப ஆற்றலையும், அளவினையும் பலப்படுத்துவதற்கு இதன்மூலம் கிடைக்கும் பங்களிப்பினை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, இந்த உபபிராந்திய மையத்தை இலங்கையில் தாபிப்பதற்காக வளிமண்டலவியல் திணைக்களத்தின் மனையிடத்தில் இரண்டு மாடி கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.