• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதையுடன் தொடர்புபடும் கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலுள்ள வீதிகளை மேம்படுத்துதல்
- மத்திய அதிவேக பாதையின் கடவத்தையிலிருந்து குருநாகல் வரையிலான 1 ஆம் பகுதியினதும் 2 ஆம் பகுதியினதும் நிருமாணிப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொத்துஹரயிலிருந்து கலகெதர வரையிலான அதன் 3 ஆம் பகுதி நிருமாணிக்கப்படவுள்ளதோடு, இதன் மூலம் கண்டி நகரம் உட்பட மத்திய மாகாணத்தின் ஏனைய நகரங்கள் உத்தேச கலகெதர இடைமாறு ஊடாக அதிவேகப் பாதை வலையமைப்புடன் தொடர்புபடுத்தப்படும். இதன் விளைவாக கலகெதரயிலிருந்து கண்டி வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால், கட்டுகஸ்தொட்டையிலிருந்து கலகெதர வரையிலான வீதிப் பகுதியை 4 பாதை வரிசை வீதியொன்றாக விருத்தி செய்வதற்கும் கட்டுகஸ்தொட்ட நகரத்தில் 4 பாதை வரிசைகளைக் கொண்ட புதிய துணை வீதியொன்றை நிருமாணிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நிதி வழங்குவதற்கு இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கி (EXIM Bank of India) உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் சம்பந்தமான விரிவான கருத்திட்ட அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்கு மதியுரைச் சேவைகளை வழங்கும் பொருட்டு இந்தியாவின் RITES LTD கம்பனியை நியமிப்பதற்காக முன்னால் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரிப்புக்கு தற்போது இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட உடன்பாட்டினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.