• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்திற்கு வேற்றுநாட்டு விலங்கு களைப் பெற்றுக்கொள்ளல்
- தெஹிவலை தேசிய மிருகக்காட்சிசாலையானது உரிய விலங்கு நலனோம்பல் ஏற்பாடுகளை பின்பற்றி நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, இங்கு காட்சிப்படுத்துவதற்கு விலங்கினங்களைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். உலகம் முழுவதுமுள்ள ஏனைய மிருக காட்சிசாலைகளுடன் விலங்குகளைப் பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்கள், வௌிநாடுகளிலுள்ள மிருகக்காட்சிசாலைகளினால் இலவசமாக வழங்கப்படும் மேலதிக விலங்குகளை பெற்றுக் கொள்தல் என்பன இதன் போது பின்பற்றப்படும் பிரதான நடவடிக்கைகளாகும். அதேபோன்று இலங்கைக்கு விலங்குகளைக் கொண்டுவந்து வளர்ப்பவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விலங்குகளை கொள்வனவு செய்வதற்கான சாத்தியம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, விலங்கு பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக 1982 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க தேசிய மிருகக்காட்சிசாலைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் திருத்தப்படும் வரை விலங்கின பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் விலங்குகளை வழங்குதல் என்பவற்றின் ஊடாக தேவையான விலங்குகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இலங்கைக்கு வௌிநாட்டு பறவைகளையும் வீட்டுப் பிராணிகளையும் கொண்டுவந்து வளர்க்கும் ஆட்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து உரிய பெறுகை வழிமுறையின் கீழ் விலங்குகளை கொள்வனவு செய்வதற்கு தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அதிபதிக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டும் முன்னாள் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேிப்புகள், தற்போது இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் தெரிவிக்கப்பட்ட உடன்பாட்டினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.