• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை மாற்ற சவால்களுக்கு மத்தியில் நீர் வளங்களை வினைத்திறன் மிக்கதாக முகாமித்தல்
- இலங்கைக்கு வருடாந்தம் 2,000 மில்லி மீற்றருக்கு கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுவதோடு, இதன் மூலம் போசாக்கு அடையும் அண்ணளவாக 103 கங்கைகள் நாட்டின் சகல பிரதேசங்களையும் தழுவி கடலைச் சென்றடைகின்றன. ஆயினும், இந்த மழைவீழ்ச்சியுள்ள காலப்பகுதிகளில் மற்றும் இடங்களில் உள்ள மாற்றங்கள் மற்றும் நீர்வழிந்தோடல் முறையில் மாற்றங்கள் காரணமாக நாட்டின் 65 சதவீத நிலப்பரப்பு உலர் வலயமாக இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்த வலயம் அடிக்கடி நீர்ப்பற்றாக் குறைக்கும் வறட்சிக்கும் ஆளாகின்றன. காலநிலை மாற்றங்களினால் பிரதிகூலமான பாதிப்புகளுக்கு இலங்கை ஆளாகும் ஆபத்தும் உயர்வடைந்துள்ளதோடு, குறுகிய காலப்பகுதிக்குள் உருவாகும் கடும் மழைவீழ்ச்சி போன்ற மழைவீழ்ச்சியின் மாற்றம் அதேபோன்று வருடமொன்றினுள் வறட்சியான காலநிலை நிலவும் நாட்கள் அதிகரித்துள்ளமை போன்றவையும் கடந்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவு காரணமாக உருவாகும் எதிர்வுகூற முடியாத வௌ்ளம், மண்சரிவு, வறட்சி போன்ற அனர்த்த நிலைமைகளாவன காரணமாக நாட்டின் கமத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு, நீர்ப்பாசன விநியோகம், குடிநீர் விநியோகம், நீர்மின்சார உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலைக்கு கடும் தாக்கத்தினைச் செலுத்துகின்றன. இந்த சவால்களை வெற்றி கொள்வதற்கு நாட்டின் நீர்வள அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் சார்பில் பரந்துபட்ட மற்றும் கூட்டிணைந்த கொள்கைக் கட்டமைப்பொன்றைத் தயாரிக்கும் தேவை எழுந்துள்ளது.

இதற்கமைவாக, உரிய சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு, மொத்த நீர்வள முகாமைத்துவம் சார்பில் கூட்டிணைந்த முகாமைத்துவ பொறிமுறையொன்றைத் தாபிப்பது தொடர்பிலான சிபாரிசுகளை மூன்று (03) மாத காலப்பகுதிக்குள் சமர்ப்பிப்பதற்காக சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் சனாதிபதி செயலணியொன்றைத் தாபிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.