• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிபொருள் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
- இலங்கைக்கான வெடிபொருள் இறக்குமதி மற்றும் அது தொடர்புபட்ட ஒழுங்குறுத்துகைப் பணிகள் வெடிபொருள் கட்டளைச் சட்டத்தின் மூலம் மேற்க்கொள்ளப்படுகின்றது. காலத்தின் தேவையினை கருத்திற் கொண்டு இந்தக் கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, வெடிபொருள் அல்லது அது சார்ந்த பொருட்களை ஏற்றிவரும் வௌிநாட்டு கப்பல்கள் அல்லது விமானங்கள் இலங்கையின் கடல் பாதை அல்லது விமான பாதை ஊடாக செல்லும் போது இதன் சார்பில் அனுமதி வழங்குதல், “வெடிபொருள் கட்டுப்பாட்டாளர்" என்னும் பதவியை “வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் அதிபதி" என சட்டத்தில் குறிப்பிடுதல், நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் மிகச் சிறந்த வழிமுறைகளை பயன்ப்படுத்தி இந்தக் கட்டளைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் போன்ற திருத்தங்களை உள்ளடக்கி 1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிபொருள் கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பிரேரிப்புகளை பெற்றுக் கொள்வதற்கு உரிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.