• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அவசரநிலை திண்மக்கழிவு முகாமைத்துவ கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிட மிருந்து நிதியங்களைப் பெற்றுக் கொள்ளல்
- திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிலைத்து நிற்கும் தீர்வுகளை வழங்குதல் மற்றும் புத்தளத்தில் அறுவக்காலு பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றல் வசதியொன்றை நிருமாணிக்கும் நோக்குடன் இலங்கை அவசரநிலை திண்மக்கழிவு முகாமைத்துவ கருத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினாலும் நடைமுறைப்படுத்தப்படும் கூறப்பட்ட கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 274 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

இச் செலவில், 115 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையொன்று உலக வங்கியின் மீள்நிருமாண மற்றும் அபிவிருத்திக்கான சருவதேச வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் 115 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் இணங்கியுள்ளது. மீதி 44 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தினால் தாங்கப்படும். அதற்கிணங்க, கூறப்பட்ட வங்கியினால் வழங்கப்படுவதற்கு இணங்கப்பட்ட 115 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன்தொகையை பெற்றுக் கொள்வதற்கு ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியுடன் கடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.