• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் நோக்கங்களுக்காக நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படும் காணிகளுக்கு குத்தகை சலுகை வழங்குதல்
- 1947 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் வீடுகளை நிருமாணிப்பதன் நோக்கத்திற்காகவும் வர்த்தக செயற்பாடுகளுக்காகவும் குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்கும் போது குத்தகை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தக அடிபப்டையில் கமத்தொழில் நோக்கங்களுக்காக அரசாங்க காணிகளை வழங்குவது குறித்து, வர்த்தக அடிப்படையில் காணிகளை வழங்குவதற்கான பொது நடைமுறை பின்பற்றப்படாமையினால், பாரியளவு கமத்தொழில் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அரசாங்க காணிகளை விடுவித்தல் மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, நாட்டின் விவசாயத்துறையில் அபிவிருத்தி இலக்குகளை இலக்குவைத்து, அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் நீண்டகால குத்தகை அடிப்படையில் கமத்தொழில் நோக்கங்களுக்காக காணிகளை வழங்கும் போது பின்வரும் குத்தகை சலுகைகளை எதிர்காலத்தில் வழங்கும் பொருட்டு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

(i) வருடாந்த குத்தகை தொகையைப் போன்று மூன்றுமடங்கான ஒருதடவை மாத்திரம் அறவிடப்படும் தவணைத் தொகையை அறவிடாமல் இருத்தல்;

(ii) ஒவ்வொரு 05 வருடங்களுக்கும் ஒருமுறை 50 சதவீத அதிகரிப்பினால் குத்தகை வாடகையை திருத்துவதற்குப் பதிலாக, எந்த வருடத்தில் திருத்தம் அமுலாக்கப்படவுள்ளதோ அந்த வருடத்திற்கு முன்னைய வருடத்திற்கு ஏற்புடையதாகவிருந்த குத்தகை வாடகைக்கு 20 சதவீதமான தொகையினை சேர்ப்பதன் மூலம் குத்தகை வாடகையினைத் திருத்துதல்; அத்துடன்

(iii) ஆரம்ப குத்தகைக் காலப்பகுதி நிறைவுற்ற பின்னர் குத்தகைக் காலப்பகுதியினை மீண்டும் நீடிக்கும் போது, ஆரம்ப குத்தகைக் காலப்பகுதியின் நிறைவில் அறவிடப்பட்ட குத்தகை தொகைக்கு 20 சதவீதத்தை சேர்த்து பெறப்படும் பெறுமதியானது இரண்டாவது குத்தகை காலப்பகுதியின் தொடக்க குத்தகை பெறுமதியாக கருதுதல்.