• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக உரிய ஒப்பந்தங்களை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இலங்கை கொழும்பு, பௌத்த மற்றும் பாளி ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக பின்வரும் ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

(i) கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கான மாணவர் சேவை நிலையமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 381.49 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளித்தல்;

(ii) இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தில் மொழித்திறன் அபிவிருத்தி நிலையமொன்றையும் பரீட்சை மண்டபமொன்றையும் நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 215.42 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Central Engineering Services (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளித்தல்;

(iii) கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திற்கான பல்நோக்க கலையரங்கொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 674.47 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Link Engineering (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளித்தல்; அத்துடன்

(iv) கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடத்திற்கான கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 701.18 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு M/s. Edward and Christie (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளித்தல்.