• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகரத்தின் மனையிடங்களில் கழிவுநீரை அகற்றுவதற்கான வசதிகளை வழங்குதல்
- தற்போது நடைபெற்றுவரும் கொழும்பு துறைமுக நகரத்திற்குத் தேவையான பயன்பாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கழிவுநீரை அகற்றும் வசதியை வழங்குவதற்காக 5.50 கிலோமீற்றர் மொத்த நீளத்திற்கு கொழும்புத் துறைமுக நகரத்திலிருந்து மாதம்பிட்டிய நீரிறைப்பு நிலையம் வரை 900 மில்லி மீற்றர் விட்டம் கொண்ட பிரதான கழிவுநீர் குழாயொன்றை இடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரேரிக்கப்பட்ட கழிவுநீர் குழாய் இணைப்புக்களை இடவேண்டிய மக்கலும் கால்வாய்க்கு (Beirra Outfall) குறுக்காகச் செல்லும் பகுதியில் வரையறுக்கப்பட்ட இடவசதியே கிடைக்கக்கூடியதாக உள்ளதனால், அங்கே காணப்படும் 02 கழிவுநீர் குழாய் இணைப்புக்களுக்குப் பதிலாக பொதுவான குழாய் இணைப்பொன்றை இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இந்த பகுதிக்கு பொதுக் குழாய் இணைப்பினை இடுவதற்காக அத்திபாரமிடும் ஒப்பந்தத்தை 48 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு தற்போது இந்த இடத்தில் இலங்கை மின்சார சபையின் நிலத்தடி கேபில்கள் இடும் வேலைகளில் ஈடுபட்டுள்ள M/s ELS Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு கொள்கையளவில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.