• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தென் கொழும்பு மணல் போஷிப்புக் கருத்திட்டத்தின் கீழ் கல்கிசையி லிருந்து அங்குலான வரையான கடற்கரையோர பிரதேசத்தை வலிமையாக்குதல்
- மேற்கு கரையோரப் பிரதேசத்தில் கடலரிப்புக்கு உட்படும் பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ள கல்கிசை, தெஹிவளை, இரத்மலானை வெடிகந்த மற்றும் மொறட்டுவை ஆகிய கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கி, கொள்ளுப்பிட்டியிலிருந்து கல்கிசை வரையான கரையோரப் பிரதேசத்தில் இயந்திரமயமான மணல் போஷிப்பு முறைமையைப் (Sand Engine Methodology) பயன்படுத்தி கடற்கரையோர பிரதேசத்தை வலிமையாக்குவதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கம் கருதி நடைமுறைப்படுத்தப்படும் தென் கொழும்பு மணல் போஷிப்புக் கருத்திட்டம் சார்பில் 2018ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 800 மில்லியன் ரூபா ஏற்பாட்டைப் பயன்படுத்தி மணல் போஷிப்பிற்கு ஊடாக கிட்டத்தட்ட 5.5 கிலோமீற்றர் நீளம் கொண்ட கல்கிசையி லிருந்து அங்குலான வரையான கடற்கரையோர பிரதேசத்தை வலிமையாக்குவ தற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சருவதேச போட்டி விலைமனு நடைமுறையின் கீழ் இக்கருத்திட்டத்தின் அமுலாக்கத்திற்காக பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு கொள்கையளவில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.