• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தை திருத்துதல்
- காலத்தின் தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தை திருத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச சார்பற்ற அமைப்புகளின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தாக்கம் சம்பந்தமாக ஆராய்ந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளும் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு அடங்கலாக உரிய தரப்புகளின் கருத்துகளையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) திருத்த சட்டமூலமானது வரையப்பட்டுள்ளது.

அரசசார்பற்ற சகல அமைப்புகளையும் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தல், அரசசார்பற்ற அமைப்புகளின் ஒழுங்குறுத்துகை மற்றும் மேற்பார்வை சார்பில் அதிகாரம் பெற்ற நிறுவனமான அரசசார்பற்ற அமைப்புகள் தேசிய செயலகத்தை நியதிச்சட்ட நிறுவனமொன்றாக தாபித்தல், அரசசார்பற்ற அமைப்புகளுக்கும் அரசாங்கத்திற்கு இடையில் பரஸ்பர ஒத்துழைப்பினை மேம்படுத்துதல், நாட்டின் பொது அபிவிருத்தி தேவைகளை நிறைவு செய்யும் முயற்சியில் அரசசார்பற்ற அமைப்புகளை அங்கீகரித்தல், சிவில் சமுகத்தை பலப்படுத்தலும் அதிகாரமளித்தலும், அரசசார்பற்ற அமைப்புகளின் பயனுள்ள செயற்பாட்டிற்கு வசதிகளை ஏற்பாடு செய்தல், அவற்றின் நிதி, கொள்கை மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான வௌிப்படைத்தன்மையை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் உத்தேச திருத்தத்தை மேற்கொள்ளும் நோக்கமாகும், இதற்கமைவாக, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.