• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி கற்கை தொடர்பிலான ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளல்
- இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி கற்கை தொடர்பிலான ஒத்துழைப்பினை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் ஜேர்மன் கல்வி பரிமாற்றச் சேவைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.